மூணாறு : மூணாறில் முக்கிய சுற்றுலா தலமான மாட்டுப்பட்டி அணையில் விடுமுறை நாட்களை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் அணையில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். தென்னகத்து காஷ்மீர் என்றுஅழைக்கப்படும் மூணாறில் தற்போது காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பிற்பகல் இதமான காலநிலை ஏற்படுகிறது தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மூணாறின் நிலவும் காலநிலையை அனுபவிக்கவும், கோடை விடுமுறையை கழிக்கவும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.