புதுடெல்லி: வாக்குப்பதிவுக்கு பின்பு நடத்தப்படும் கருத்துக்கணிப்பு
முடிவுகள், தேர்தல் முடிவில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள
நிலையில், 1998 முதல் 2014ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு
முடிவுகளும், தேர்தல் முடிவுகளும் குறித்த புள்ளி விபரங்கள் வெளியாகி
உள்ளது. நாடு முழுவதும் 17வது நாடாளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை
தேர்வு செய்வதற்காக 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு
நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் வெளியான சில
ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜ கூட்டணி 300க்கும்
அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று
தெரிவித்துள்ளன. கடந்த தேர்தல்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது பெரும்பாலான
கருத்துக் கணிப்புகள் எதிர்பார்த்தபடி இல்லை. மாறாக தவறுதலாகவும்
முடிந்துள்ளது.
அதனால், வாக்குப் பதிவுக்கு பிந்தையை கருத்துக்
கணிப்புகள் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. பொதுவாக
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்பது, வாக்காளர்கள்
அனைவரும் ஒட்டுமொத்தமாக வாக்களித்த பிறகு வெளியிடப்படும் கருத்துக்
கணிப்பாகும். எந்த அரசு ஆட்சியை அமைக்கப் போகிறது என்பது குறித்து இதில்
கணிக்கப்படும். தேர்தலுக்கு முன்பு, வாக்காளர்களிடம் ‘யாருக்கு
வாக்களிக்கப் போகிறீர்கள்? என்று கேட்கப்படும், ஆனால் இதில், ‘யாருக்கு
வாக்களித்தீர்கள்?’ என்று கேட்டு, அதற்கு ஏற்றவாறு முடிவுகள்
வெளியிடப்படும். பல நிறுவனங்களின் சார்பில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய
கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஆறு தேசிய
கட்சிகள் மற்றும் 18 மாநில கட்சிகளின் ஒப்புதலோடு, சட்டத்துறை
அமைச்சகத்திடம் ஒட்டுமொத்தமாக தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய
வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கை ஏற்கப்பட்டாலும், பிப்ரவரி
2010ம் ஆண்டு வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு மட்டும்
பிரிவு 126(A) படி தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், கருத்துக் கணிப்புகள்
ஒரு சார்பாக இருப்பதாகவும், போட்டியாளர்களுக்கு எதிராக வேண்டுமென்றே தவறான
கணிப்புகளை கொடுப்பதாகவும் என்று அரசியல் கட்சிகள் பரஸ்பரம்
குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
நடப்பு தேர்தலில், மே 19 மாலை வரை
வாக்குப்பதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை அமலில்
உள்ளது. 11.04.2019 காலை 7 மணியிலிருந்து, 19.05.2019 மாலை 6.30 மணி வரை,
மின் ஊடகம், அச்சு ஊடகம் வெளியிட அனுமதி இல்லை. வாக்குப்பதிவுக்கு பிந்தைய
கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் இந்தியாவில் நம்பகத்தன்மை அற்றவை என்பது
நிரூபணம் ஆகியுள்ளது. பல முறை தேர்தல் முடிவுகள் தவறாக
கணிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச அறிக்கைகள் கூறுகின்றன. இந்நிலையில், 1998
முதல் 2014ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களின் கருத்துக்கணிப்பு முடிவு
மற்றும் தேர்தல் முடிவு குறித்த அலசல் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில், ‘தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் கருத்துக் கணிப்புகளை
நம்ப வேண்டாம். அது வாக்கு இயந்திரங்களை மாற்றி, தில்லுமுல்லு செய்யும்
முயற்சி’ என்று மேற்குவங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.முன்னதாக, ஆந்திர
மாநிலம் குண்டூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு குடியரசுத் துணை
தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், ‘‘எனது பங்களிப்பு இல்லாமல் இந்த
தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இப்போது தேர்தலுக்கு பிந்தைய
கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த ‘எக்சிட் போலை’ நம்பாமல்,
‘எக்ஸாட் போலை’ நம்புங்கள்; அதாவது நிஜ தேர்தல் முடிவுகளை நம்புங்கள்’’
என்றார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
அளித்த பேட்டியில், ‘‘கருத்துக்கணிப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
மக்கள் யாரைத் தேர்வு செய்துள்ளனர் என்பது மே 23ம் தேதி தெரிந்துவிடும்.
அந்த முடிவின்படி செயல்படுவோம்’’ என்றார்.1998ல் பாஜ கூட்டணி ஆட்சிசெய்தி நிறுவனம் பாஜ கூட்டணி காங். கூட்டணி மற்ற கட்சிகள்அவுட்லுக்/ஏசிஎன் 238 149 156டிஆர்எஸ் 249 155 139பிரண்ட்லைன்/சிஎம்எஸ் 235 155 182இந்தியா டுடே/சிஎஸ்டிஎஸ் 214 164 165தேர்தல் முடிவு 252 166 1191999ல் பாஜ கூட்டணி ஆட்சிசெய்தி நிறுவனம் பாஜ கூட்டணி காங். கூட்டணி மற்ற கட்சிகள்இந்தியா டுடே/இன்சைட் 336 146 80ஹெச்டி-ஏசிஎன் 300 146 95அவுட்லுக்/சிஎம்எஸ் 329 145 39டைம்ஸ்போல்/டிஆர்எஸ் 332 138 -தேர்தல் முடிவு 296 134 1132014ல் பாஜ கூட்டணி ஆட்சிசெய்தி நிறுவனம் பாஜ கூட்டணி காங். கூட்டணி மற்ற கட்சிகள்ஏபிபி 281 97 165டைம்ஸ் நவ்-ஓஆர்ஜி 249 148 146சிஎன்என்-ஐபிஎன் 280 97 166ஹெட்லைன்ஸ் டுடே 272 115 156சாணக்கியா 340 70 133இந்தியா டிவி/சி-ஓட்டர் 289 101 153என்டிடிவி 279 103 161தேர்தல் முடிவு 336 59 1482004ல் காங். கூட்டணி ஆட்சிசெய்தி நிறுவனம் பாஜ கூட்டணி காங். கூட்டணி மற்ற கட்சிகள்அவுட்லுக்-எம்டிஆர்ஏ 290 169 99அஜய்டாக்-ஓஆர்ஜி 248 190 105என்டிடிவி/எக்ஸ்பிரஸ் 250 205 120ஸ்டார்/சி-ஓட்டர் 275 186 98தேர்தல் முடிவு 189 222 1322009ல் காங். கூட்டணி ஆட்சிசெய்தி நிறுவனம் பாஜ கூட்டணி காங். கூட்டணி மற்ற கட்சிகள்ஸ்டார் நியூஸ்/ஏசிஎன் 197 199 136டைம்ஸ் நவ் 183 198 162என்டிடிவி 177 216 150ஹெட்லைன்ஸ்evடுடே 180 191 172தேர்தல் முடிவு 159 262 792019ல் எந்த கூட்டணி ஆட்சி?செய்தி நிறுவனம் பாஜ கூட்டணி காங். கூட்டணி மற்ற கட்சிகள்டைம்ஸ் நவ்/விஎம்ஆர் 306 132 104ரிபப்ளிக் - சி-ஓட்டர் 287 128 117நியூஸ் எக்ஸ் நேட்டா 298 118 127என்டிடிவி போல்ஸ் 298 128 116சுவர்ணா நியூஸ் 295-315 122-125 102-125நியூஸ் நேசன் 282-290 118-126 130-138ஜன்ஹிபாட் 295-315 122-125 102-125டுடே சாணக்கியா 340 70 133விபிடி 333 115 94நியூஸ் எக்ஸ் 242 162 136ஏபிபி நியூஸ் 267 127 148டைம்ஸ் ஆப் இந்தியா 306 152 84நியூஸ் 18/ சிஎன்என் 336 82 124தேர்தல் முடிவு 23ம் தேதி தெரியும்