நாட்டில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களில் ஏழுமலையான் கோவில் கட்ட திட்ட அறிக்கை: திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி: நாட்டில் உள்ள, 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களில் ஏழுமலையான் கோவில் கட்ட திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு வருவதாக, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில், திருப்பதி செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம் கூறியதாவது:நாட்டில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான கல்யாண மண்டபங்களில் நவீனப்படுத்தும் பணிகள் பல கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களிலும், திருமலையில் வழங்கப்படுவது போல, மூத்த குடிமக்களுக்கு தனி தரிசன வரிசை ஏற்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள, 29 மாநிலங்கள், ஏழு யூனியன் பிரதேசங்களில், ஏழுமலையான் கோவில் கட்ட திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில அரசுகள் 5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் நிலம் வழங்க முன்வந்தால் தேவஸ்தானம் அங்கு கோவில் கட்ட ஏற்பாடுகளை துவக்கும் என கூறப்படுகிறது.

Related Stories: