கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடல்வாழ் உயிரிகள் கடத்தல்: சென்னை வர்த்தக மையமாக செயல் படுவதாக புகார்

டெல்லி: இந்தியாவில் இருந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, கடல் அட்டை, நட்சத்திர ஆமை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதற்கு , சென்னை நகரம் வர்த்தக மையமாக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. பல்வேறு மாநிலங்களிருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் கடல் வாழ் உயிரினங்கள் கப்பல் மற்றும் விமானங்களில் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. வன விலங்குகள் கடத்தல் தடுப்புப் பிரிவில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையே கடத்தலைத் தடுக்க முடியாததற்கு காரணம் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

1கிலோ எறும்பு தின்னி 60 ஆயிரம் ரூபாய், நட்சத்திர ஆமை 25 ஆயிரம் ரூபாய் என்று விற்பனை செய்யப்படுவதால், உயிரி கடத்தல் ஜோராக நடைபெற்று வருகின்றது. படித்து முடித்து  வேலை கிடைக்காமல் சுற்றும் இளைஞர்கள் இந்த கடத்தல் தொழிலில் ஈடுபடுவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பச்சை தவளைகள், கட்டு விரியன் பாம்பு ஆகியவை இந்தியாவிற்கு கடத்தி வரப்படுகின்றன.வனவிலங்கு கடத்தல் பிரிவில் கூடுதல் பணியாளர்களை நியமித்து கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என விலங்குநல ஆர்வலர்கள் வலியுறுத்திருக்கின்றனர்.  

Related Stories: