செயல் அலுவலர், பணியாளர் தாக்கப்பட்ட விவகாரம் குற்றவாளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துங்கள்: கமிஷனர் பணீந்திரரெட்டி டிஜிபிக்கு கடிதம்

சென்னை: கோயில் செயல் அலுவலர், பணியாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்தால் போலீசார் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துங்கள் என்று அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திரரெட்டி தமிழ டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார் குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்ட முயன்றவர்கள் மீது செயல் அலுவலர் சீனிவாசன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 12ம் தேதி ஞாயிறு கிராமம் அருகே புஷ்பரதீஸ்வரர் கோயில் பணிகளை முடித்து மாலை 3 மணி அளவில் செயல் அலுவலர் சீனிவாசன், கோயில் பணியாளர் தனஞ்செயன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யும் நோக்கில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.  

                                                   

இதை கண்டித்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அறநிலையத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கமிஷனர் பணீந்திர ரெட்டியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், கோயில் செயல் அலுவலர்கள், ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் அளிக்கும்போது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் துறைத்தலைவருக்கு பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்கிறோம்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் கமிஷனர் பணீந்திரரெட்டி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கோயில் சொத்துக்களை மீட்க செல்லும் போது பாதுகாப்பு என்பது அவசியம். ஆனால், செயல் அலுவலர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற பாதுகாப்பு கேட்டால் கூட சில நேரங்களில் பாதுகாப்பு தருவதில்லை. இதனாலேயே சில நேரங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது. இப்பிரச்னையை தடுக்க ஆக்கிரமிப்பு தொடர்பாக செயல் அலுவலர்கள் புகார் அளிக்கும்போது அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து ேபாலீஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: