தமிழகத்தில் மே 27 ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்: சத்யபிரதா சாஹூ

சென்னை : தமிழகத்தில் மே 27 ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 2-ம் கட்டமாக கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது வரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. எஞ்சிய 7-ம் கட்ட மக்களவை தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது.

இதனுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்துடன் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 23 ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில் தேர்தல் நடைமுறைகள் மே 27 ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் அன்று வரை தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறினார்.

Related Stories: