களைக்கட்டும் நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் பிரசித்திப்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த சித்திரை திருவிழாவில் பிரசித்திப்பெற்ற செடில் உற்சவம் நடைபெற்றது. கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கிய நிலையில், இன்று முக்கிய நிகழ்வான காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு சித்திரை திருவிழாவின் போதும் காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடைபெறும். குழந்தை வரம் வேண்டியவர்கள் தம் பிராத்தனை நிறைவேறிய பின்னர் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தங்களது குழந்தைகளை செடில் உற்சவத்தில் பங்கேற்க வைப்பனர்.

 ஏற்றம் போல் அமைந்துள்ள செடியை 5 வயது வரையுள்ள குழந்தைகளை தாங்கிய படி காத்தவராயன் போல் வேடமணிந்த பூசாரி சக்கரம் போல் சுழற்றுவதே நேர்த்திக்கடன் ஆக கருதப்படுகிறது. அவ்வாறு நேர்த்திக்கடன் நிறைவேற்றும் குழந்தைகளுக்கு நோய்,பிடிகள் வராது என்பது ஐதீகமாக உள்ளது. விழாவின் ஒரு பகுதியாக தேரோட்டமும் நடந்த நிலையில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தும், மாவிளக்கு வைத்து படையலிட்டும், பால்காவடி, பன்னீர்காவடி, வேப்பில்லை காவடி, மற்றும் பாடைக்காவடி உள்ளிட்ட பல்வேறு விதமான காவடிகளை எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Related Stories: