அரசுக்கு எதிராக பேசியதாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது வழக்கு: போலீசார் விசாரணை

சென்னை: மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி சேப்பாக்கத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. காவல் துறையின் அனுமதி பெற்று மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  ராஜூ என்பவர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசுக்கு எதிராக குற்றத்தை செய்யத் தூண்டும் நோக்கத்தில் உரையாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் ஆணையாளர் உத்தரவிட்டார்.  அதன்படி உரைகளின் தொகுப்பை கொண்டு இந்தக் கூட்டத்தில் பேசிய ராஜு, இளம் சேகுவேரா, தியாகு, சுரேஷ், சக்தி முருகன், பாரதி ஆகியோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: