சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் இன்றும் அனல் காற்று வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் இன்றும் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே காரணமாக வெப்பச்சலனம் காரணமாக வேலூர் தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டஙகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று சென்னை உட்பட 15 மாவட்டங்களில் வெயில்  சதத்தை தாண்டி பதிவாகியுள்ளது.   தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இந்த மாதத்தில் 113 டிகிரி வரை வெயில் உச்சம் அடைந்துள்ளது. இப்போது படிப்படியாக குறைந்து வந்தாலும், வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் அப்படியேதான் நீடிக்கிறது. அதிகபட்சமாக வேலூர், திருத்தணியில் நேற்று 110 டிகிரி வெயில் கொளுத்தியது. திருச்சி, சேலம் 105 டிகிரி, பாளையங்கோட்டை, மதுரை, நாகப்பட்டினம், கரூர், சென்னை  ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் நிலவியது. இதன் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது.

Related Stories: