கடன் வட்டி எஸ்பிஐ குறைப்பு

புதுடெல்லி: ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் வட்டியை பாரத ஸ்டேட் வங்கி 5 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதன்படி, ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் வட்டி, 8.5 சதவீதத்தில் இருந்து 8.45 சதவீதம் ஆகியுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே, எம்சிஎல்ஆரில் இணைந்த கடன்கள் மேற்கண்ட வட்டி விகிதத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும் என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.  இத்துடன் இந்த வங்கி கடந்த ஒரு மாதத்தில் 2வது முறையாக வட்டியை குறைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து இதுவரை, வீட்டுக்கடன்களுக்கான வட்டி 15 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததற்கு ஏற்ப எச்டிஎப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவையும் வட்டியை குறைத்துள்ளன.  பாங்க் ஆப் பரோடா கடந்த வாரம் எம்சிஎல்ஆர் வட்டியை 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இது கடந்த 7ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இந்த வங்கி எம்சிஎல்ஆர் வட்டியில் 10 அடிப்படை புள்ளிகளை குறைத்திருந்தது.

Related Stories: