அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு நியமனத்தை ரத்து செய்ய வழக்கு: ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை: அன்னை தெரசா பல்கலை. துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழு நியமனத்தை, ரத்து செய்யக் கோரிய வழக்கில் உயர்கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பேராசிரியர் இஸ்மாயில், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்காக தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு உறுப்பினர்களாக  டாக்டர்கள் மாலதி, மஞ்சுளா, பிரேமா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம், பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரானது. விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே,  தேடுதல் குழு நியமனத்திற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

விதிகளை பின்பற்றி தகுதியான நபர்களைக் கொண்டு புதிய தேடுதல் குழு உறுப்பினர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி ஆகியோர், மனு குறித்து உயர்கல்வித்துறை செயலர், பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: