ஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினரால் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஹைதரபாத் : ஆந்திர - ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினரால் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒடிசாவின் கோரக்பூட் மாவட்டத்தில் உள்ள படுவா வனப்பகுதியில்  மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒடிசாவின் கோரக்பூட் மாவட்டத்திற்குட்பட்ட படுவா வனப்பகுதியில்  மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகளை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.ஆந்திர மாநிலத்தை ஒட்டிய ஒடிசாவின் Kituakanti வனப்பகுதியில் சிறப்புக் காவல்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் பயிற்சி முகாம் நடைபெற்று வருவதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அச்சமயத்தில் அங்குப் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரைக் கண்டதும், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதலில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், 5 மாவோயிஸ்டுகளைச் சுட்டுக் கொன்றனர். இந்த துப்பாக்கிச்  சண்டையில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 2 பெண் உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.மேலும், அவர்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து கைத்துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: