புழல் 23-வது வார்டில்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

புழல்: சென்னை மாநகராட்சி, புழல் 23-வது வார்டான திருவள்ளுவர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கான்கிரீட் சாலையில் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இதனால் அவ்வழியே ரேஷன் கடைக்கு செல்லும் மக்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து மாதவரம் மண்டலம், வார்டு அலுவலகங்களில் பலமுறை புகார் தெரிவித்தும், இந்த கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதி மக்கள் கூறுகையில், புழல் 23-வது வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வரவேண்டும். இங்கு தொற்று நோய் பரவுவதை தடுக்க, இப்பகுதிகளில் கொசு மருந்து உள்ளிட்ட பல்வேறு சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: