சொட்டுத் தண்ணீரின்றி வறண்டது சுருளி அருவி

* சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கம்பம் :  சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றதால், அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.தேனி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களில் சிறப்பு மிக்கது சுருளி நீர்வீழ்ச்சி. இது சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருகிறது.

தற்போது மழையில்லாததாலும் ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் குறைந்ததால் சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுபோனது. இதனால் அருவி வறண்டது. விடுமுறை நாளான நேற்று  குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள், சுருளி அருவியில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: