நாடு முழுவதும் இன்று பிற்பகலில் நீட் தேர்வு

சென்னை: நாடு முழுவதும் எம்பிபிஎஸ்/பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தில் 14 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் 155 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வை எழுதுகின்றனர். கடந்த காலங்களில் காலையில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், வெளியூரில் இருந்து வந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்கு சென்று சேர்வதில் ஏற்படும் சிரமம் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் மையத்துக்குள் பிற்பகல் 1.30 மணிக்குள் வந்து சேர வேண்டும். காலை 11.30 மணிக்கு தேர்வு மையம் திறக்கப்படும்.

தேர்வர்கள் 12.30 மணிக்கு வரும் பட்சத்தில் பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு எந்த வித இடர்பாடும் இன்றி தேர்வறைக்கு செல்லலாம். பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வரும் மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதனால் மாணவர்கள் காலை 11.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு செல்வதன் மூலம் பதட்டத்ைத தவிர்க்கலாம்.தேர்வு மையத்துக்குள் எடுத்துச் செல்லக்கூடாது என்று மிகப்பெரிய பட்டியல் ஒன்றை நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் www.nta.ac.in, www.ntaneet.ac.in ஆகிய இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வின்போது பயன்படுத்துவதற்கான பால்பாயின்ட் பேனா தேர்வறையிலேயே வழங்கப்படும்.சென்னை நகரில் 31 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. கேகே நகரில் உள்ள கேந்திர வித்யாலயா, சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர்பள்ளி, ஆதம்பாக்கத்தில் உள்ள டிஏவி பள்ளி, கல்லூரிகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: