பொதுமக்களின் தேவைக்காக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: நிர்வாகம் ஏற்பாடு

சென்னை: பொதுமக்களின் தேவைக்காக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 500 லிட்டர் அளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை நிர்வாகம் அமைத்துள்ளது.  சென்னையில் 45.1 கி.மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. 32 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு உள்ளே பயணிகள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை நிர்வாகம் அமைத்துள்ளது. தற்போது  வெயில் வாட்டி வைத்து வரும் நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வெளியே குடிநீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் என நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், தற்போது சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் தரைதளப்பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக 500 லிட்டர் அளவில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை சென்னை மெட்ரோ ரயில்  நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வசதி புறநகர் பூங்கா ரயில் நிலையம், டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதை, சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் மற்றும் முதன்மை சாலை பேருந்து நிலையம் ஆகிய  இடங்களை இணைக்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  இதேபோல், பொதுமக்களின்  குடிநீர்  வசதிக்காக  இது  போன்ற சேவையை இதர மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அமைக்க நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: