சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்.15ம் தேதி தொடங்கி ஏப். 4ம் தேதி வரை நடந்தது. நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற 21,400 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வை எழுதினர்.

மொத்தம் 4,974 தேர்வு மையங்கள் இதற்காக அனுமதிக்கப்பட்டது.

12,87,359 மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இவர்களில் 7,48,498 பேர் மாணவர்கள், 5,38,861 பேர் மாணவிகள். தேர்வு எழுதியவர்களில் 83.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மண்டல வாரியாக திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பெற்றுள்ளது. மாணவர்களில் 79.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 88.70 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளிகளில் 90.25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல் தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தவர்களில் 83.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அங்கீகாரம் பெற்று வெளிநாடுகளில் இயங்கும் 225 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 78 மையங்களில் தேர்வு எழுதினர்.

மே மாதம் 2ம் வாரத்தில் பிறகு  தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று cbseresults.nic.in, cbse.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டது. சென்னையை சேர்ந்த கார்த்திக் பாலாஜி என்ற மாணவர் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 3ம் இடம் பெற்றுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: