ஈரோடு ரியல் எஸ்டேட் அதிபர் என்னையும் பலாத்காரம் செய்தார்: எஸ்.பி.யிடம் மேலும் ஒரு பெண் புகார்

ஈரோடு: ‘ஈரோட்டில் பாலியல் வழக்கில் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் என்னை மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்து பலாத்காரம் செய்தார்’ என பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண், எஸ்பியிடம் புகார் மனு அளித்தார். ஈரோட்டில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, அதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி, பலாத்காரம் செய்த  ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (37) என்பவரை ஈரோடு மகளிர் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இவரால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால், ராதாகிருஷ்ணனை கஸ்டடி எடுத்து விசாரிப்போம் என போலீசார் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆன 26 வயது இளம்பெண் ஒருவர், ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி சக்தி கணேசனிடம் நேற்று புகார் அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. ஒரு மகன், மகள் உள்ளனர். அப்போது நான் குடும்ப வறுமை காரணமாக கார்மென்ட்ஸ்க்கு வேலைக்கு சென்று வந்தேன். என் கணவர் மதுப்பழக்கம் உள்ளவர். இதை பயன்படுத்தி ராதாகிருஷ்ணன் என் கணவருடன் பழகி, அவருக்கு மது வாங்கி கொடுத்து அடிமையாக்கினார். எனது மகன் பிறந்தநாள் அன்று என் கணவரும், ராதாகிருஷ்ணனும் மதுபோதையில் வீட்டுக்கு வந்தனர். அப்போது, ராதாகிருஷ்ணன் எங்களுக்குள் பிரச்னையை தூண்டிவிட்டதால், சண்டை ஏற்பட்டது. இதேபோல், தினமும் சண்டை ஏற்பட்டதால் நான் விஷமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றேன். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது நலம் விசாரிக்க வந்த ராதாகிருஷ்ணன், உனக்கு நான் இருக்கிறேன் என கூறி, குழந்தை கையில் ரூ.2ஆயிரம் கொடுத்தார். நான் குணமடைந்து வீட்டிற்கு வந்தேன். அப்போது ராதாகிருஷ்ணன் எனது கணவர் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்கு வந்து, சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதன்மூலம் என்னை அவரது ஆசைக்கு இணங்க வைத்து செல்போனில்

வீடியோ எடுத்தார். உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன். குழந்தைகளை நான் காப்பாற்றுகிறேன் என கூறி வீடியோவை காட்டி மிரட்டி 5 முறை உடலுறவு வைத்துக்கொண்டார். இதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். தற்போது ராதாகிருஷ்ணன் கைதானதால் தைரியம் வந்தது. என்னை போன்ற ஏழை பெண்களை ராதாகிருஷ்ணனிடம் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் நிருபர்களிடம் கூறுகையில், `ஒரு நாள் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, செல்போனில் படம் பிடித்து கொண்டார். இதை காண்பித்து என்னை மிரட்டினார். பின்னர் என்னையும், என் குழந்தைகளையும் காப்பாற்றுவதாக ஆசை வார்த்தை கூறி பல முறை உடலுறவு கொண்டார். இதையறிந்த என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தற்போது நான் உறவினர் வீட்டில் வசித்து வருகிறேன்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: