சமூக வலைதளத்தில் வைரலானது கோவை பெண் போலீஸ் ஆண் நண்பருடன் ஜாலி வீடியோ: ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்

கோவை: கோவை புறக்காவல் நிலையத்தை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் தனது ஆண் நண்பருடன் ஜாலியாக இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கோவை கருமத்தம்பட்டி காவல்நிலையத்தை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் தனது ஆண் நண்பருடன் ஜாலியாக இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில்  அந்த பெண் போலீஸ் ஒண்டிப்புதூரில் உள்ள தன்னுடைய ஆண் நண்பருக்கு சொந்தமான டிராவல்ஸ் நிறுவனத்தில் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இவர்கள் இருவருமே விவாகரத்தானவர்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் போலீஸ் சீருடையில் இதுபோன்ற அநாகரீகமான முறையில் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்றும் அந்த பெண் போலீஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வீடியோ காட்சிகளை அந்த பெண் போலீஸ் தன்னுடைய செல்போனில் பதிவு செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய செல்போன் தொலைந்துள்ளது. அதனை எடுத்த ஆசாமி இதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் கோவை மாவட்ட எஸ்பி சுஜித்குமாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் அந்த பெண் போலீசை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். போலீஸ் சீருடையில் இது போன்ற அத்துமீறலில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: