இமயமலையில் பனிமனிதனின் காலடித்தடத்தை கண்டதாக புகைப்படம் வெளியிட்டுள்ள இந்திய ராணுவம்!

நேபாள்: இமயமலையில் பனிமனிதனின் காலடித்தடத்தை கண்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மனிதனைப் போலவே தோற்றம் கொண்ட விலங்கினமாக குறிப்பிடப்படும் பனி மனிதன்(yeti) பனிப்பிரதேசங்களில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை. இமயமலைக்காடுகளில் இவ்வகை பனி மனிதர்கள் வசித்து வருவதாக நம்பப்படுகிறது. சராசரி மனிதனை விட அதிக உயரம் கொண்ட இந்த பனிமனிதன் இமயமலை தவிர அமெரிக்கா, சைபீரியா ஆகிய பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் வாழ்வதாக கூறப்படுகிறது. நேபாளத்தை ஒட்டிய பனிக்காடுகளில் இவ்வகை உயிரினம் வசிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். எனினும், தற்காலத்தில் அவர்கள் வசிப்பது சாத்தியமில்லை.

முந்தைய காலங்களில் அப்படி இருந்தவர்கள் காலநிலை சூழல் மாற்றத்தால் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஒருசாரார் கூறிவருகின்றனர். பனிமலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களும் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் யெதி பனிமனிதனின் காலடித்தடத்தை கண்டதாக கூறி இந்திய ராணுவத்தினர் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். அதோடு, மாகலு–பருண் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் கடந்த 9ம் தேதி மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருந்த போது, யெதியின் 32 இன்ச் நீளமும், 15 இன்ச் அகலமும் கொண்ட கால்தடம் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக மாகலு-பரூண் தேசிய பூங்கா அருகில் மட்டுமே இதேபோன்ற பனி மனிதர்கள் பார்க்கப்பட்டுள்ளனர் என்ற தகவலலையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர். பனிமனிதனின் கால் தடம் மிகப்பெரியதாக இருந்ததாகவும் ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: