திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து சங்க தலைவர் விஷால் வழக்கு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விஷால் தலைமையிலான நிர்வாகிகளின் கீழ் இயங்கி வருகிறது. இவர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தல் தேதியை தீர்மானிக்கவும் வரவு-செலவு   கணக்குகளை தாக்கல் செய்து ஒப்புதல் பெறவும் நாளை சங்கத்தின் பொதுக்குழு கூட இருக்கிறது.  இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க சென்னை மத்திய பதிவுத்துறை அதிகாரி என்.சேகரை தனி அதிகாரியாக நியமித்து தமிழக அரசு கடந்த 27ம் தேதி உத்தரவிட்டுள்ளது.      

 இந்நிலையில் தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்தும், அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்தது சட்டவிரோதம். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை உடனே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி  ரவிசந்திரபாபு முன்பு  விஷால் தரப்பு வக்கீல் கிருஷ்ணா ஆஜராகி நேற்று கோரிக்கை வைத்தார். இதைகேட்ட நீதிபதி நாளை (இன்று) விசாரிப்பதாக தெரிவித்தார். வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: