வாட்ஸ் அப்பில் வைரலாகும் ஆடியோ சீமான் மீது புகார்: கலெக்டரிடம் வக்கீல் மனு

திருச்சி: மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் நேற்று திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 23.4.2019 அன்று எனக்கு வாட்ஸ்அப்பில் ஒரு ஆடியோ வந்தது. அதில், தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் இளங்கோ மள்ளர், செல்வா பாண்டியன் ஆகியோர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் இருந்தார்கள்.

பின்னர், அவர்கள் அங்கிருந்து வெளியேறி தமிழர் தேசிய கட்சி தலைவராக இளங்கோ மள்ளரும், தமிழவர் நடுவத்தின் தலைவராக செல்வா பாண்டியனும் தங்கள் அரசியல் பயணத்தை தொடங்கினர். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. அது விபத்து அல்ல. கொலை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் உதவியாளர் புகழேந்தி பேசியது ஆடியோவில் இடம் பெற்றுள்ளது. இதுபோல தன்னையும் கொலை செய்ய சீமான் முயன்றபோது தப்பியதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

எனவே, இளங்கோ மள்ளரையும், செல்வா பாண்டியனையும் கொலை செய்து விபத்தாக மாற்றி உள்ளதாக கருத தோன்றுகிறது. எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரித்தால் இருவரும் யாரால் கொலை செய்யப்பட்டார்கள், யார் கொலை செய்ய தூண்டியது என்பது தெரிய வரும் என கூறி உள்ளார். மனுவை பெற்ற கலெக்டர் சிவராசு, அதை தலைமை செயலாளருக்கு அனுப்பி வைப்பதாக கூறினார். மத்திய மண்டல ஐஜி வரதராஜூவுக்கும் இதே மனுவை வக்கீல் பொன் முருகேசன் வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: