இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி தேவாலயங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: சோதனைக்கு பிறகே மக்கள் அனுமதி

சென்னை: இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியாக சென்னை முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிறித்தவ தேவாலயங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்தனர். அப்போது கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவித்த  தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம், கொழும்பு சங்கிரில்லா கொட்டேல், கொழும்பு சினமன் கிரேன்ட் கொட்டேல் என அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்வு நடந்தது.

இதில் 253க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ேடார் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி சென்னை  நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் மற்றும் சென்னை சாந்தோமில் உள்ள பழைமை வாய்ந்த தேவாலயம், பெசன்ட் நகர் தேவாலயம், கதீட்ரல் தேவாலயம், எழும்பூர் தேவாலயம் என சென்னை முழுவதும்  நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக சாந்தோம் தேவாலயத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் உடமைகளை போலீசார் வெடி குண்டு செயலிழக்க செய்யும் கருவியால் தீவிர சோதனை ெசய்த பிறகே உள்ளே  அனுமதிக்கின்றனர்.அதேபோல், சந்தேகத்திற்கு இடமான வகையில் வரும் நபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: