ஃபானி புயல் எதிரொலி: தமிழக கடலோர பகுதிகளில் நாளை முதல் மழை

சென்னை: வங்கக்கடலில் இலங்கையை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 25ம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 26ம் தேதி காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக உருவெடுத்தது. இது மேலும் வலுப்பெற்று நேற்று பிற்பகலில் புயலாக மாறியுள்ளது.  “ஃபானி” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தற்போதைய நிலவரப்படி இந்த புயல் தமிழகத்தின் வட கடற்கரையோர  பகுதிகளில் 200 முதல் 300 கிலோ மீட்டர் தொலைவில் வர வாய்ப்புள்ளதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. இந்த புயல் தமிழகத்தை கடக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.  இந்த புயல் காரணமாக, இன்று மாலை முதல் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 90 முதல் 100 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

நாளை காலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில்  120 முதல் 130 கி.மீ வேகத்திலும், 30ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில்  155 முதல் 165 கி.மீ வேகத்திலும், மே 1ம் தேதி மாலை வரை தமிழ்நாடு பாண்டிச்சேரி, ஆந்திர கடற்கரையோர பகுதிகளில் 130 முதல் 140 கி.மீ  வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும், பலமான காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த புயல் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழகத்தின் வடகடலேரா பகுதிகளிலும், ஆந்திரா கடலோர பகுதிகளிலும், கேரளாவிலும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: