களக்காடு அருகே ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்: பனை மரங்களை வேரோடு சாய்த்தது

களக்காடு: களக்காடு அருகே ஒற்றை யானை நேற்று மீண்டும் அட்டகாசம் செய்தது. பனை மரங்களை வேரோடு சாய்த்து துவம்சம் செய்தன.களக்காடு அருகே சிதம்பரபுரம் மலையடிவார பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக ஒற்றை ஆண் யானை அட்டகாசம் செய்து வருகிறது. தினசரி இரவில் பனை மரங்களை சாய்த்து வருகிறது. இதுவரை 20க்கும் மேற்பட்ட பனைகளை யானை சாய்த்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவில் மீண்டும் சத்திரங்காட்டில் ஒற்றை யானை புகுந்தது. விவசாயிகளும், வனத்துறையினரும் தீப்பந்தங்கள் காட்டி யானையை விரட்ட முயற்சிகள் மேற்கொண்டனர். அதற்குள் யானை, அங்கிருந்த 2 பனை மரங்களை வேருடன் சாய்த்தது.

களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சேதமான பனைகளை பார்வையிட்டனர். யானை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். களக்காடு பகுதியை மிரட்டி வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும், யானைகள் நாசம் செய்த பனை மரங்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: