கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகினார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே நகரில் யூதமத கோவில் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த இளம்பெண் மற்றும் 2 ஆண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் 19 வயதே ஆன ஜான் எர்னஸ்ட் என அடையாளம் தெரிந்துள்ளது.