அசாமைச் சேர்ந்த தீவிரவாதி சென்னையில் கைது : கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை

சென்னை : அசாமைச் சேர்ந்த தீவிரவாதி கந்தர்ப்பதாஸ் சென்னை அமைந்தகரையில் கைது செய்யப்பட்டார். சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கட்டுமான பணியில் கந்தர்ப்பதாஸ் கடந்த 6 மாத காலம் பணியாற்றி வந்துள்ளார். நேற்று கட்டுமானப்பணியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சில இளைஞர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் ஒருவர் தான் ஒரு உல்ஃபா தீவிரவாதி என்றும் உன்னை கொன்றுவிடுவேன் என்றும் தொடர்ந்து எச்சரித்துள்ளார்.

இந்த சண்டையை கவனித்துக்கொண்டிருந்த அந்த தனியார் மருத்துவமனையின் காவலாளி தலைமையாக இருக்கும் முன்னாள் உதவி ஆணையர் ராமதாஸ் எனபவர் இது தொடர்பாக இணையத்தில் சோதித்து பார்த்தார். அப்போது அசாமை சேர்ந்த கந்தர்ப்பதாஸ் என்பது தெரியவந்துள்ளது. இவன் ஏற்கனவே  கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜி.சி.எல்.ஓ. என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. அங்கிருக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவருடன் சேர்த்து 3 தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர்.  குறிப்பாக  ஜி.சி.எல்.ஓ. என்ற அமைப்பானது அங்கு திட்டமிட்டு பல்வேறு வெடிகுண்டு வைப்பதற்கும், பொது இடங்களை தகர்ப்பதற்கும் திட்டமிட்டிருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் தகவலறிந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கந்தர்ப்பதாஸ் உட்பட 4 தீவிரவாதிகளை கைது செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடனடியாக போலீசார் அவரை கைது செய்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தற்போது கியூ பிரிவு போலீசார் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கந்தர்ப்பதாஸ் எதற்காக தமிழகத்திற்கு வந்துள்ளார். கட்டுமான தொழிலில் இங்கு பணிப்புரிய காரணம் என்ன என்ற பல்வேறு விதமாக இங்கு விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இலங்கை குண்டுவெடிப்பு நடந்து பல்வேறு அச்சுறுத்தல்கள் இருக்கும் நிலையில் தற்போது சென்னையில்  தீவிரவாதி சிக்கியுள்ளது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இவருக்கும் இலங்கை குண்டுவெடிப்புக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா, அல்லது தனியாக இங்கு ஏதேனும் நாசவேலைகளை செய்வதற்காக திட்டமிட்டு இங்கு வந்து இருக்கிறாரா என்ற பல்வேறு கோணங்கள் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: