இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

சென்னை: இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகளும் உடமைகளும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் மற்றும் வெடிகுண்டு சோதனை பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டிருக்கிறது. குறிப்பாக தமிழக கடலோர எல்லை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய கப்பல் படை, கடலோர காவல் படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற கிருஸ்தவ தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையங்களில் இன்று காலை முதல் ரயில்வே பாதுகாப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பயணிகளின் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ரயில் நிலையம் உள்ளே அனுமதிக்கப்பட்டுகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: