தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்வோம்: குமரி போலீஸ்காரர் மிரட்டப்பட்டாரா?...தந்தை, உறவினர்கள் பரபரப்பு தகவல்

குலசேகரம்: குமரியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் மிரட்டப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே நடைக்காவு பாறையடி பகுதியை சேர்ந்தவர் அஜின்ராஜ் (26). நெல்லை மணிமுத்தாறு 9வது பட்டாலியன் பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்த பட்டாலியன் பிரிவின் கீழ்தான் கோதையாறு நீர்மின் நிலையத்தின் பாதுகாப்பு பணி வருகிறது. ஆகவே நேற்று காலை 8 மணிக்கு கோதையாறு நீர்மின் நிலையத்தில் அஜின்ராஜ் பாதுகாப்பு பணியில் இருந்தார்.அப்போது திடீரென தனது அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பேச்சிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அஜின்ராஜ், அவரது கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இரு வீட்டாரும் பேசி திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்து உள்ளனர்.

அதன் பிறகு காதலர்கள் இடையே திடீரென பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் திருமணத்தில் சிக்கல் எழுந்தது. இதனால் மனம் உடைந்த அந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் குழித்துறை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். பொது மக்கள் மீட்டு மாணவியை களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் காதல்ஜோடியை அழைத்து விசாரித்தனர். இறுதியாக அஜின்குமாருக்கும், கல்லூரி மாணவிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு இரு தரப்பினரும் வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் தான் யாரும் எதிர்பாராதவிதமாக நேற்று காலை பணியில் இருந்த அஜின்ராஜ், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இருக்கிறார். அஜின்ராஜ் தற்கொலையில் ஏதோ மர்மம் ஒளிந்து இருப்பதாக அவரது உறவினர்கள் கருதுகின்றனர். அதாவது, காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்கு பிறகு அஜின்ராஜ் எதையோ பறிகொடுத்தவர் போல் இருந்து இருக்கிறார். விசாரணையின் போது சிலர் அஜின்ராஜை மிரட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகவேதான் அவர் தற்கொலை முடிவை எடுத்து இருப்பார் என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே போலீசார் அஜின்ராஜின் தந்தை பால்ராஜ் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அஜின்ராஜுக்கும் அவர் காதலித்த பெண்ணுக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடத்துவற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதன்பின்னர் அந்த பெண்  தற்கொலைக்கு முயன்றதாகவும், இந்த நிலையில் அஜின்ராஜ் தற்ெகாலை செய்துள்ளதாகவும் பால்ராஜ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. போலீசார் உறவினர்களிடம் நடத்திய  விசாரணையில், அஜின்ராஜ் காதலித்த பெண் குழித்துறை  தாமிரபரணி ஆற்றில்  குதித்து தற்கொலைக்கு முயன்ற போது அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பெண்ணிடம் களியக்காவிளை போலீசார்  விசாரணை நடத்தினர். அதன்பின்னர் களியக்காவிளை போலீசார் அஜின்ராஜை தொடர்பு  கொண்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ேவண்டும். இல்லையென்றால் தற்கொலைக்கு  தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்படும் என கூறியதாக தெரிகிறது. போலீசார்  மிரட்டியதால் அஜின்ராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சம்பந்தப்பட்ட பெண்  திருமணம் செய்ய தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் அவர் தற்கொலை செய்து  கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: