ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து கத்தாரில் நடந்த பெண்களுக்கான ஆசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றுள்ளார். அதற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தாங்கள் தற்பொழுது கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்று வரும் 2019ம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தங்களுக்கு என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): 2013 முதல் பல்வேறு பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிற கோமதி, தொடக்கத்தில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் மனம் தளரவில்லை. இத்தகைய சோதனைகள் அனைத்தையும், நெஞ்சுரத்தால் எதிர்கொண்ட கோமதி, இன்று சாதனை படைத்து இருக்கின்றார். இன்று வருமானவரித்துறை அதிகாரியாகவும் திகழ்கின்றார். கோமதியின் வாழ்க்கையும் சாதனையும், தமிழக மகளிருக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.  

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): கத்தார்  தலைநகர் தோகாவில் 23 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் தடகள போட்டியில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து முதல் தங்கத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார். தமிழகத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த கோமதி ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்றிருப்பதால் தமிழர்கள் பெருமிதம் அடைகிறார்கள். ஏழை குடும்பத்தில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் தனது கடின உழைப்பால், தொடர்  பயிற்சியால், விடா முயற்சியால் உலக அளவில் சாதனை படைத்திருப்பது  தனிச்சிறப்பு. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: