தேனியில் சூறைக்காற்று வாழை, கரும்பு நாசம்

தேனி: தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம்  சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், வடபுதுப்பட்டியில் 80 ஏக்கர் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதேபோல் தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, தர்மலிங்கபுரம், குள்ளப்புரம், சங்கரமூர்த்திபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வாழை, கரும்பு, முருங்கை மரங்கள் நாசமாயின.

Advertising
Advertising

மாவட்டத்தில் மொத்த சேத மதிப்பு  ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், குமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் கனமழையுடன் சூறைக்காற்று வீசியதால் குலை தள்ளிய நிலையில் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் முறிந்தன. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: