மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா பயணம்?

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். தேமுதிக  தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக  தொண்டை வலி காரணமாக பேசுவதை தவிர்த்து வந்தார். தைராய்டு மற்றும் குரல் வள  பிரச்னை இருந்து வந்ததால் அமெரிக்கா சென்ற அவர் ஒரு மாதத்துக்கு மேலாக  அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று கடந்த பிப்ரவரி 16ம் தேதி சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய விஜயகாந்த் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.  யாரும் எதிர்பார்க்காத நிலையில் விஜயகாந்த் கடந்த 15ம் தேதி சென்னையில் உள்ள 3 மக்களவை ெதாகுதியில் பிரசாரம் செய்தார். வேனில் இருந்தவாறு அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஓரிரு நிமிடங்கள் மட்டுமே, ரொம்ப மெதுவாக பேசினார்.

இந்நிலையில் மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.இதுதொடர்பாக தேமுதிகவினர் கூறுகையில், “தற்போது மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ளது. சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தேதி கேட்கப்பட்டுள்ளது. தேதி கிடைத்ததும் அவர் அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளது” என்றனர். அதே நேரத்தில் 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. இதனால், விஜயகாந்த் அமெரிக்கா செல்லும் தேதி தள்ளி போகலாம் என்றும்   கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: