சட்டவிரோத உற்பத்தியில் ஈடுபடும் நோபல் டெக் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்': சவுந்தரராஜன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய தொழிற்சங்க மையத்தின் தலைவர் சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகில் செயல்படும் நோபல் டெக் இன்டஸ்ட்ரி என்ற இரும்பு தொழிற்சாலையில் சுமை ஏற்றி இறக்கும் பணிக்காக அனுமதிபெற்ற ஒப்பந்த  தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தியதால் ஸ்டீல் மெல்ட்டிங் பர்னஸ் இரும்பு கொதி உலையில் இருந்த இரும்பு வெடித்து சிதறியதால் 8 பேர் தீக்காயம் அடைந்து,  5 பேர் இறந்துள்ளனர். மேலும் மூன்று பேர் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உருக்கு ஸ்டீல் பர்னஸ் 1600 டிகிரி கொதிநிலையில் உற்பத்தி செய்யும் பகுதியில் பாதுகாப்பு கருவிகள் ஆடைகள் எதுவும் கொடுக்கப்படுவது கிடையாது. பயிற்சியற்ற ஒப்பந்த  தொழிலாளர்களை சுமை ஏற்றி இறக்கும் பணிக்காக எடுக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 400 பேரை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தி சட்டவிரோத உற்பத்தியை மேற்கொள்வது  போன்ற நடவடிக்கையால் கடந்த 10 ஆண்டுகளில் பலர் இறந்துள்ளனர். இந்த ஆலையில் பணியின் போது ஏற்படும் விபத்து என்பது தொடர்ச்சியாக நடைபெற்ற போது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் பேச்சுவார்த்தைகளில் நிர்வாகம்  பங்கேற்காத நிலையில் பேச்சுவார்த்தையில் நிர்வாகம் பங்கேற்க வலியுறுத்தி ஆலை தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் 13ம் தேதி ஆலை முன்பு கூடி  நிர்வாகத்தை சந்தித்து முறையிட்டனர்.

நோபல்டெக் நிர்வாகம் கொடுத்த   பொய் புகார் மீது காவல்துறை முத்துக்குமார் மற்றும் 5 பேர் உள்ளிட்ட 50 பேர் மீது பிணையில் வர முடியாத குற்ற விதிகளில் பொய்  வழக்கை பதிவு செய்துள்ளது. காவல் துறையின் இந்த நடவடிக்கையை சிஐடியு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. எனவே தமிழக தொழிலாளர் துறையும், தொழிற்சாலை துறையும், நோபல் டெக் ஆலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை போக்கி தொழில் அமைதி ஏற்படுத்திட  முன்வரவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: