நாடாளுமன்ற தேர்தலையொட்டி ரஜினி, கமல் உள்பட நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட திரையுலகினர் பலரும் நேற்று  வாக்களித்தனர். நாடாளுமன்ற  தேர்தல் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நேற்று நடந்தது. மும்பையில் தர்பார் படத்தில் நடித்து வந்தார்  ரஜினிகாந்த். வாக்களிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு அவர் சென்னை வந்தார். நேற்று காலை 7.13 மணி அளவில்  ஸ்டெல்லா  மேரீஸ் கல்லூரிக்கு வந்து அவர் ஓட்டு போட்டார். சென்னை  ஆழ்வார்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் காலை 8 மணி அளவில்  மகள்  ஸ்ருதிஹாசனுடன் வந்து கியூவில் நின்று வாக்களித்தார். நடிகரும் மக்கள் நீதி மய்யம்  தலைவருமான கமல்ஹாசன்.  முன்னதாக அவர் வாக்களித்த மையத்தில் திடீரென வாக்கு இயந்திரம் பழுதானது. இதையடுத்து  காத்திருந்து பின்னர் வாக்களித்தார். காலை 8 மணி அளவில் நடிகர் விஜய்  நீலாங்கரை பகுதியில் உள்ள பள்ளியிலும், அஜித், அவரது மனைவி ஷாலினியுடன் வந்து  திருவான்மியூர் தொடக்க பள்ளியிலும் வாக்களித்தனர்.

நடிகர்கள் சிவகுமார்,  சூர்யா, கார்த்தி ஆகியோர் தி.நகர் இந்தி பிரசார சபாவில் அமைக்கப்பட்ட  வாக்கு சாவடியில் வாக்களித்தனர்.  கவிஞர் வைரமுத்து கோடம்பாக்கம் மாநகராட்சி  நடுநிலைப்பள்ளியில் வாக்கு பதிவு செய்தார். நடிகர்கள் தனுஷ், சரத்குமார்,  சத்யராஜ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், பார்த்திபன், ராகவா லாரன்ஸ்,  டி.ராஜேந்தர், கார்த்திக்,  ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி, பாபி  சிம்ஹா, வடிவேலு, விவேக், சந்தானம், கருணாஸ், ஆர்.ஜே. பாலாஜி, கருணாகரன்,  பிரசன்னா,  நடிகைகள் திரிஷா, ரெஜினா, தன்ஷிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, குஷ்பு, சினேகா, இயக்குனர்கள்  ஏ.ஆர்.முருகதாஸ்,  விஜய்,  மோகன்ராஜா, வெங்கட் பிரபு, இசை அமைப்பாளர்கள் ஜிப்ரான், தேவா, டி.இமான் உள்ளிட்டோர் தங்களின்  வாக்குகளை  பதிவு செய்தனர். திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் பெரும்பாக்கம் பாரதி வித்யாலயா  மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: