வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய அரசியல்வாதிகள்: தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

டெல்லி: வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் 17வது மக்களை தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் முதற்கட்டமாக கடந்த ஏப்.,11ம் தேதி 20 மாநிலங்களில் நடைபெற்றது. மேலும் ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக யோகி ஆதித்யநாத் 3 நாள், மாயாவதி 2 நாள் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இருவருக்கும் தேர்தல் ஆணையம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.அசம்கான், மேனகாவும் தடை: இதேபோல், உ.பி.யின் ராம்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நடிகை ஜெயப்பிரதாவை அநாகரீகமாக விமர்ச்சித்ததற்காக, அவரை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி வேட்பாளர் அசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதேபோல், ‘‘எனக்கு ஓட்டு போடாவிட்டால், உங்களுக்கு உதவ மாட்டேன்’’ என்று சிறுபான்மையினருக்கு மிரட்டல் விடுத்த சுல்தான்பூர் பாஜ வேட்பாளரும், மத்திய அமைச்சருமான மேனகா காந்திக்கு 2 நாள் பிரசாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

பிரச்சாரம் செய்ய 2 நாள் தடை விதித்த தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து மாயவாதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய அரசியல்வாதிகள் மீது தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: