ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பின் அனில் அம்பானிக்கு பிரெஞ்ச் அரசு ரூ.1,100 கோடி வரி தள்ளுபடி

புதுடெல்லி: ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானிக்கு பிரெஞ்ச் அரசு ரூ.1,100 கோடி வரியை தள்ளுபடி செய்துள்ளது. அனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி தள்ளுபடி பற்றி லி மான்ட் என்ற பிரெஞ்ச் பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் அட்லாண்டிக் ஃபிளாக் பிரான்ஸ் என்ற பெயரில் பிரான்ஸ் நாட்டில் அனில் அம்பானி ஒரு கம்பெனி நடத்துகிறார். 2007-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை 151 மில்லியன் யூரோ பணம் வரியாக செலுத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 7.6 மில்லியன் யூரோ பணம் மட்டுமே வரியாக தர முடியும் என்று அனில் அம்பானி கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் மோடி பிரதமர் ஆனவுடன் பிரான்சில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை அடுத்து அனில் அம்பானிக்கு ரூ.1,100 கோடி வரியை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடி அறிவித்தார். மோடி அறிவிப்பதற்கு 15 நாட்களுக்கு முன் பிரான்ஸ் ராணுவ அமைச்சரை அனில் அம்பானி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 787 கோடி யூரோ மதிப்பிலான ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. இதன் மூலம் பிரான்ஸ் நிறுவனம் 50 சதவீத செயல்பாட்டை இந்தியாவில் உள்ள நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த வகையில் டசால்ட் நிறுவனம், ரஃபேல் போர் விமானம் உதிரி பாகங்கள் தயாரிப்பை இந்தியாவில் உள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தனது கூட்டாளி நிறுவனமாகத் தேர்வு செய்தது. ஆனால், பாதுகாப்பு துறையின் விமானத் தயாரிப்பு, பராமரிப்பு துறையில் எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துடன் டசால்ட் நிறுவனம் கூட்டு வைத்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: