ரஃபேல் வழக்கில் நீதிமன்றம் எடுத்துள்ள முடிவால் மோடி அரசு ஊழல் அரசு என்பது நிரூபனம் :சீதாராம் யெச்சூரி

கோவை : ரஃபேல் போர் விமான வழக்கில் மத்திய அரசு பல தகவல்களை மறைத்து உள்ளது என்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இவ்வாறு தெரிவித்துள்ளார். திருடப்பட்ட ஆவணத்தை உச்சநீதிமன்றம் ஏற்கக் கூடாது என்று மத்திய அரசு வாதிட்டதாக குறிப்பிட்ட அவர், எந்த ஆவணமாக இருந்தாலும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிமன்றம் கூறியதாக தெரிவித்தார். மேலும் பத்திரிகைகளின் புலனாய்வு செய்திகள் மூலம் ஆவணங்கள் வெளிவந்து உள்ளது என்றும் எடுத்துரைத்தார்.

மேலும் அவர் கூறியதாவது :

* ரஃபேல் வழக்கின் தீர்ப்பு மூலம் மோடி அரசு ஊழல் அரசு என்பது நிரூபனம் ஆகியுள்ளது.

*ஊழல் செய்ததன் மூலம் மோடி அரசு நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்துள்ளது.

*பாஜக ஊழல் அரசு என்பதற்கான ஆதாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

*பாதுகாப்பு துறை ஒப்பந்தத்தை வழங்குவதில் குறிப்பிட்ட தொழில் அதிபருக்கு ஆதரவாக மோடி செயல்பட்டுள்ளார்.

*ரஃபேல் விமானத்திற்கு கொடுத்த விலை விவரத்தை தலைமை கணக்காயருக்கு தெரிவிக்காமல் மறைத்தது மோடி அரசு

*ரஃபேல் விவகாரத்தில் பதில் கூறாமல் ஏமாற்றியதுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையையும் ஏற்க மறுத்தது மோடி அரசு

*உச்சநீதிமன்றத்தில் ரஃபேல் வழக்கு விசாரணையை திசைதிருப்ப முயற்சித்தது மோடி அரசு.

*நரேந்திர மோடி அரசை தூக்கி எறிவதற்கான நேரம் வந்துவிட்டது.

*ரஃபேல் பேரத்தில் குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.    

*126 ரஃபேல் விமானங்களுக்கு பதிலாக நரேந்திர மோடி அரசு 36 விமானங்கள் வாங்கவே முடிவு செய்தது

*பிரதமர் நரேந்திர மோடி ஒப்பந்தத்தின்படி 2021ம் ஆண்டு தான் ரஃபேல் விமானம் இந்தியாவுக்கு வரும்

*காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி இருந்தால் எப்போதோ ரஃபேல் விமானம் இந்தியா வந்திருக்கும்.

*இந்தியாவின் பாதுகாப்பு விசயத்திலேயே மத்திய அரசு சமரசம் செய்து உள்ளது.

*பிரான்ஸ் அரசின் உத்தரவாதம் தேவை இல்லை என்று புதிய ஒப்பந்தத்தில் உள்ளது.

*பிரதமர் மோடி அரசு செய்த ஒப்பந்தத்தில் பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

*எஸ்க்ரோ கணக்கு தொடங்குவதற்கும் ஒப்பந்தத்தில் விலக்கு தரப்பட்டு உள்ளது.

*கட்சிகளுக்கு நன்கொடை தர அரசு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது.    

*முதல் கட்டத்தில் விற்கப்பட்ட பாத்திரங்கள் மூலம் 94.5% நிதி பாஜகவுக்கு சென்றுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: