மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கோயம்பேடு மார்க்கெட்டில் அடிப்படை வசதி செய்வேன்: தென்சென்னை அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா உறுதி

சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா பரிசு பெட்டி சின்னத்துக்கு வாக்கு கேட்டு தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று 180வது வட்டத்துக்கு உட்பட்ட வேளச்சேரி, கானகம், பெரியார் நகர், தரமணி, 174வது வட்டத்துக்கு உட்பட்ட கக்கன் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.  குறிப்பாக பெரியார் நகரில் நரிக்குறவர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதி மக்கள் இசக்கி சுப்பையாவுக்கு சிறப்பான வரவேற்பளித்து தங்களது வாக்குகளை பரிசு பெட்டி சின்னத்துக்கு அளிப்பதாக உறுதி அளித்தனர். அவருடன், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி சரவணன், பகுதி செயலாளர் சந்திரபோஸ், பொருளாளர் சண்முகர் உட்பட ஏராளமானோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

 அப்போது இசக்கி சுப்பையா பேசியதாவது:  தென்சென்னையில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு தான் பிரதான பிரச்னையாக உள்ளது. என்னை வெற்றி பெறச் செய்தால் குடிநீர் பிரச்னை ஏற்படாத வகையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பேன். கோயம்பேடு மார்க்கெட்டில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண்பேன். பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளையும் போக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: