மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 33 இடங்களில் வெற்றி வாய்ப்பு: லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு

சென்னை: சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 33 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறியும் பொருட்டு பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளிட தொடங்கிளயுள்ளன. அவ்வகையில், சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாட்டு மக்கள் தொடர்பகத்தின் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள், சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று வெளியிடப்பட்டது.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 21,464 பேரிடம் கருத்து கேட்டு கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக பண்பாட்டு மக்கள் தொடர்பகம் தெரிவித்துள்ளது. அதில், தமிழகம் மற்றும் புதுவையில் திமுக கூட்டணி 27 முதல் 33 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக கூட்டணி 3 முதல் 5 மக்களவை தொகுதிகளிலும், அமமுக கூட்டணி ஒன்று முதல் 2 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக.

மேலும், அதிமுக 2 முதல் 3 தொகுதிகளிலும், அமமுக 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, நடுத்தர, ஏழை வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் பெறும் மனநிலை 7-10% அதிகரித்துள்ளதாகவும், வாக்குக்கு பணம் பெறுவது தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்துறையில் புதிய முதலீடுகளை ஊக்குவிப்பதில் அரசின் செயல்பாடு திருப்தியளிக்கவில்லை என 55% பேர் கருத்து தெரிவித்துள்ளதாக பண்பாட்டு மக்கள் தொடர்பகத்தின் கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: