இலங்கை அகதிகள் முகாமில் செயின் பறித்த ஆசாமிக்கு தர்மஅடி

புழல்: புழல் அகதிகள் முகாமில் தம்பதியிடம் செல்போன், செயின் பறித்த ஆசாமியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 1200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை அகதிகள் முகாமை சேர்ந்த விஜயகுமார் (47), இவரது மனைவி ஜெயவாணி (43) ஆகியோர்  அங்குள்ள மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.  அப்போது, சுற்றுச்சுவர் வழியாக எகிறிக் குதித்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி, விஜயகுமார் அருகில் இருந்த 2 செல்போன்கள் மற்றும் ஜெயவாணி அணிந்திருந்த ஒரு சவரன்  செயினை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். திடுக்கிட்டு எழுந்த ஜெயவாணி, திருடன், திருடன் என கூச்சலிட்டார்.

சத்தம் ேகட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, மர்ம ஆசாமியை மடக்கி பிடித்து, தர்மஅடி கொடுத்து புழல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (25) என்பதும், இவர்  மீது வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: