ஏப்ரல் 1 முதல் அறிவித்தபடி வேலைநிறுத்தம் தொடங்கும் : ஜெட் ஏர்வேஸ் விமானிகள், ஊழியர்கள் அறிவிப்பு

மும்பை : நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் விமானம் பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து கடன் பெற்று விமானிகளுக்கு ஊதியம் வழங்க நினைத்த திட்டம் தோல்வியில் முடிந்தத , இதன் காரணமாக முன்பு அறிவித்தபடி ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்களும் விமானிகளும் ஏப்ரல் 1 முதல் தேதியில் வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

alignment=

பாரத ஸ்டேட் வங்கியின் நிதியுதவி மார்ச் 29ம் தேதி வழங்கப்பட உள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இதனால் விமானிகளின் சம்பள பாக்கி பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று ஜெட் ஏர்வேஸ் நம்பியது. ஆனால் நேற்று இந்தப் பணம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கவில்லை. இதனால் தாங்கள் அறிவித்தபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக விமானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி மற்றும் மும்பையில் விமானிகள் கூட்டத்தில் சம்பள பாக்கி குறித்து இதுவரை எந்த அறிவிப்பு வராத நிலையில் அறிவித்தபடி ஏப்ரல் 1  முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளனர்.மேலும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் சேவை தற்போது பாதியாக குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது, விமானங்களுக்கான வாடகை தொகையை  ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வழங்காததால் விமான  சேவை பாதியாக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: