தளி பஞ்சாயத்து தலைவர் கொலையில் 4 பேருக்கு இரட்டை ஆயுள்

பூந்தமல்லி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் வெங்கடேசன். முன்விரோதம் காரணமாக இவர் கடந்த 2002ல் பஸ் நிலையம் அருகே மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செந்தூர் பாண்டியன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கிருஷ்ணப்பா (47), நாராயணசாமி என்ற  நாராயணப்பா (45), நாகா என்ற நாகப்பா (25), மைனர் ரோஸ் என்ற வெங்டகிரி (52) ஆகிய 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் இறந்து விட்டனர். மேலும் இந்த வழக்கில் 8 பேர் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பையொட்டி நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும்  தண்டனை அறிவிக்கப்பட்ட 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: