தேர்தலில் திமுக கூட்டணிக்கு தென்னிந்திய கிறிஸ்தவ கவுன்சில் ஆதரவு

சென்னை: நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தென்னிந்திய கிறிஸ்தவ கவுன்சில்  அறிவித்துள்ளது. இதுகுறித்து, கவுன்சில் தலைவரும், பேராயருமான டி.ஜி.எஸ்.பால் வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் சிறுபான்மையின மக்களின்  நலனிலும், வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறையும் அன்பும் கொண்டிருந்தார். குறிப்பாக கிறிஸ்தவ சமுதாய மக்கள் மீது அளவு கடந்த அன்பும், பாசமும்,  மரியாதையும் வைத்திருந்தவர்.  அவரது பாதையில் வீறுநடை போட்டு கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்தி செல்லும் தலைவராக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலினும் கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையின மக்களின் நண்பனாக, பாதுகாவலனாக திகழ்கிறார் என்பதில் ஐயமில்லை.

சிறுபான்மை சமூக மக்களும், கிறிஸ்தவ வாக்காள பெருமக்களும் தங்களது முழு ஆதரவையும், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்து  வரலாறு காணாத வெற்றியை தேடித்தரும்படி தென்னிந்திய கிறிஸ்தவ கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.  நாற்பது நாடாளுமன்ற மற்றும் 18  சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தென்னிந்திய கிறிஸ்தவ கவுன்சில் நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், போதகர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு  திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: