இன்ஜின் பழுதால் பழநியில் 4 மணிநேரம் நின்ற திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்: பயணிகள் அவதி

பழநி: இன்ஜின் பழுது காரணமாக பழநியில் திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் 4 மணிநேரத்திற்கும் மேலாக நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து திருச்செந்தூருக்கு பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு பாலக்காட்டிலிருந்து புறப்படும் இந்த ரயில் பழநிக்கு காலை 7.45க்கு வந்து சேரும். சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், பழநி கடந்து சென்ற பின்பு திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் புறப்பட்டு செல்லும். வழக்கம்போல் இன்று காலை 7.45க்கு பழநி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில், சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக காத்திருந்தது.

சென்னை எக்ஸ்பிரஸ் சென்ற பின், திருச்செந்தூர் பாசஞ்சர் ரயிலை இயக்க ஓட்டுநர் முற்பட்டார். ஆனால் இன்ஜின் பழுதானதால் ரயிலை இயக்க முடியவில்லை. நீண்டநேரம் போராடியும் பழுதை சரிசெய்ய முடியாததால் மதுரையில் இருந்து மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டது. இன்ஜின் பழுதால் 4 மணிநேரத்திற்கும் மேலாக பழநியில் திருச்செந்தூர் பாசஞ்சர் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: