10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாட கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் புகார்

சென்னை; 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாட கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இன்றைய தினம் 25-ம் தேதி கணித தேர்வு நடைபெற்றது. பொதுவாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில் மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். குறிப்பாக இதுவரை நடைபெற்ற தேர்வுகள் ஓரளவு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தாலும் இன்றைய தினம் நடைபெற்ற கணித தேர்வு மிக கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு, அரையாண்டு திருப்புதல் தேர்வுகளில் வராத கேள்விகள் பொதுத்தேர்வில் கேட்கப்பட்டு உள்ளன. ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் மட்டும் இல்லாமல் 5 மதிப்பெண் கேள்விகளும் முன்பு கேட்கப்படாதவை என தெரிவித்துள்ளனர். குறிப்பாக கணித தேர்வின் கேள்வி கடினமாக இருந்ததின் காரணமாக மாணவர்கள் கலக்கம் அடைந்திருப்பது மட்டுமல்லாமல் ஒரு மாணவி இதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. குறிப்பாக சின்ன சேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்த பூங்குழலி என்ற மாணவி தேர்வு எழுதிவிட்டு வந்தவுடன் மிகவும் சோகமாக காணப்பட்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து அறைக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. இதனை தொடர்ந்து அங்கு பார்த்த போது தான் அவர் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதே போன்று மதுராந்தகம் பகுதியில் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் அதிர்ச்சியடைந்து தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு கேள்வி கடினமாக கேட்டது தான் இவர்கள் தற்கொலைக்கு காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: