கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா மேகமலை வன உயிரின காப்பாளர் ஆய்வு

கூடலூர்: கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி பளியன்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதையை, மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லே ஆய்வு செய்தார்.தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு கூடலூருக்கு தெற்கே, பெரியாறு புலிகள் சரணாலய தமிழக எல்லைப்பகுதியில், 4,830 அடி உயரத்தில் கண்ணகி கோயில் உள்ளது. கோயிலுக்கு செல்ல கேரள எல்லையான குமுளியிலிருந்து கேரள அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பாதை வழியாக ஜீப் செல்லும் வண்டிப்பாதையும், கூடலூர் அருகே பளியன்குடியிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக 6.6 கிலோ மீட்டர் நடைபாதையும் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கோயில் இருப்பதால், இந்தப்பாதைகள் வழியாக ஆண்டுக்கு ஒருமுறை சித்ரா பவுர்ணமி அன்று மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டு கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா வரும் ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மேகமலை வனஉயிரின காப்பாளர் சச்சின் போஸ்லே நேற்று வனத்துறையினருடன் பளியன்குடி வனப்பாதை வழியாக கண்ணகி கோயிலுக்கு சென்றார். கோயிலுக்கு செல்லும் வழியில் பாதை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்தார். இதுகுறித்து மேகமலை வன உயிரின காப்பாளர் கூறுகையில், ‘பளியன்குடி பாதை சீரமைப்பு, நடந்து செல்லும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதி அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விழாவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு பளியன்குடியிலிருந்து அத்தியூத்து வழியாக உள்ள பாதை செப்பனிடப்படும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: