எதிரிகளை தூள் தூளாக்கும் தைரியம் பிரதமர் மோடியிடம் தான் உள்ளது : பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு

கருமந்துறை: மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏற்காடு கருமந்துறை மலை கிராமத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கினார். பிரச்சாரத்தின் போது கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்தும், வாக்கு கேட்டும் பேசினார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்வதால் தான் அதிமுக ஆதரிக்கிறது என்றார். நாட்டை பாதுகாக்க பிரதமர் மோடியால் தான் முடியும் என்ற முதல்வர், நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என பேசினார். பாகிஸ்தானில் சிக்கிய விமானப்படை வீரர் அபிநந்தனை மீட்ட பெருமை பிரதமர் மோடியையே சேரும் என்றார்.

எதிரிகளை தூள் தூளாக்கும் தைரியம் பிரதமர் மோடியிடம் தான் உள்ளது. எனவே நாடு பாதுகாப்பாக இருக்க மீண்டும் பிரதமராக மோடியே வர வேண்டும். ஆகவே பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து அதிமுக அமைத்துள்ள கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். பாரதிய ஜனதா - அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் தான் தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், நிதி எளிதாக கிடைக்கும் என்றார். திறந்த வேனில் இருந்தபடியே எல்.கே.சுதீஷிற்கும், சேலம் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கும் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தை துவக்குவதற்கு முன்னதாக தனக்கு ராசியான அகாவிலான வெற்றி விநாயகர் ஆலயத்தில் வழிபாடு செய்த பின்னர் முதல்வர் பின்னர் பிரச்சாரத்தை துவக்கினார்.

முதல்வருடன் அமைச்சர் சி.வி.சண்முகம், வேட்பாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கருமந்துறை கீழ்வீதியில் துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி முதல்வர் வாக்கு சேகரித்தார். கருந்துறை, புத்தரக் கவுண்டபாளையம், வாழப்பாடி, , அயோத்திய பட்டணம் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்தும், வேட்பாளரை ஆதரித்தும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: