பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தமிழக காங். செயல் தலைவருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன்..... விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழக காங்கிரஸ் ெசயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி நூற்றுக்கும் மேற்பட்டோரை பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அதிமுக முக்கிய பிரமுகரின் மகன்கள் மற்றும் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் ெவளியானது. அவர்களை காப்பாற்ற போலீசார் முயற்சிப்பதாக கூறப்பட்டதால், தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதை தொடர்ந்து வழக்கு முதலில் சி.பி.சி.ஐ.டிக்கும், பின்னர் சி.பி.ஐக்கும் மாற்றப்படுவதாக தமிழக அரசு அடுத்தடுத்து அறிவித்தது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை சிபிசிஐடி போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும்படி தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ெஜயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக உள்ள மயூரா ெஜயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் காங்கிரசார் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: