7வது ஊதிய குழு அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்படவில்ைல தேர்தலில் அதிமுக அரசுக்கு பதிலடி தருவோம்: கோயில் பணியாளர்கள் போர்க்கொடி

சென்னை :தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,119 கோயில்கள் உள்ளது. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் அடக்கம். இக்கோயில்களில் இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர், மேலாளர் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர்களை 7வது ஊதிய குழு அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டது. அதே போன்று திருக்கோயில் பணியாளர்களும் 7வது ஊதிய குழு அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்று திருக்கோயில் பணியாளர்கள் வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக, திருக்கோயில் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர். இதையடுத்து 7வது ஊதிய குழு அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்ய இணை செயலாளர் லைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் கோயில் பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களை அழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும், சங்கங்கள் சார்பிலும் இந்த குழுவிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிலையில் இதுவரை 5 முறைக்கு மேல் பணியாளர் சங்கங்ககளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், தற்போது வரை பணியாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

 இதனால், 7வது ஊதியம் நிர்ணயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கோயில் பணியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழக அரசிடம் பல முறை கோயில் பணியாளர்கள் முறையிட்ட நிலையில், அவர்களுக்கு அரசு ஊழியர்கள் போன்று 7வது ஊதிய குழு அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதால், மக்களவை தேர்தலில் ஆளும் அரசுக்கு பதிலடி தருவோம் என்று கோயில் பணியாளர்கள் பேசி வருகின்றனர். ேமலும், அவர்கள், தங்களது வாட்ஸ் அப் குரூப்பில் காரசாரமாக இது குறித்து விவாதித்து வருவது தொடர்பாக தகவல்கள் வெளியான நிலையில் அறநிலையத்துறை தலைமை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோயில் பணியாளர் சங்கங்களை அழைத்து அவர்கள் சமாதானம் செய்ய அறநிலையத்துறை தலைமை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: