தமிழகம், புதுவை எம்.பி.க்களின் செயல்பாடு மோசம்; முக்கிய விவாதங்கள் புறக்கணிப்பு... வருகை பதிவில் குறைவு

புதுடெல்லி: 16-வது மக்களவையின் ஆயுட்காலம் ஜுலை 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதில் இடம்பெற்றிருந்த 534 எம்.பி.க்களின் செயல்பாடு குறித்து டெல்லி நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 37 அதிமுக எம்.பி.க்கள், மற்றும் பாமக, எம்.பி. அண்புமணி, பாரதிய ஜனதா எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன், புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகிய 40 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அவர்களின் செயல்பாடுகள் சாதனைக்குரிய ஒன்றாக இல்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவைக்கு அவர்களின் வருகையின் சராசரி 78 சதவிகிதம் அளவுக்கே உள்ளது. இது தேசிய சராசரியை விட 2 சதவிகிதம் குறைவாகும். குறிப்பாக 17 எம்.பி.க்கள் மிக குறைந்த நாட்களே அவைக்கு வந்துள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி. அண்புமணியின் வருகை 45 சதவிகிதம் மட்டுமே உள்ளது. எம்.பி.க்களில் ஒருவர் கூட 90 சதவிகிதம் வருகையை பெற்றிருக்கவில்லை.

2014-ம் ஆண்டு ஜுன் 1-ம் தேதி முதல் 2019 பிப்ரவரி 13-ம் தேதி வரையிலான காலத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் 1,250 தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்துள்ளனர். இதில் தமிழக எம்.பி.க்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை என டெல்லி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. ஒரு எம்.பி. சராசரியாக 67 விவாதங்களில் பங்கேற்றிருக்க வேண்டும்.

ஆனால் தமிழக எம்.பி.க்கள் சராசரி பங்கேற்பு அளவு 47-ஆக மட்டுமே உள்ளது. புதுச்சேரி எம்.பி. ஆர்.ராதாகிருஷ்ணன் 9 விவாதத்தில் மட்டுமே பங்கேற்றுள்ளார். அண்புமணி மற்றும் விருதுநகர் எம்.பி. டி.ராதாகிருஷ்ணன் தலா 12 விவாதங்களில் பங்கேற்றிருப்பதாகவும், இது மிக குறைந்த அளவு என்று டெல்லி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: